Monday, 8 May 2017

இராப்போஜனம் (Lord's Supper)


இராப்போஜனம் (Lord's Supper) மதியம் எடுப்பது சரியா தவறா? கால்களை கழுவ வேண்டுமா?

[1] தமிழில்: இராப்போஜனம். இரவு + போஜனம்.
[2] கிரேக்க மொழியில்: Deipnon (δεῖπνον). The principal meal of the Greeks and Romans, corresponding to our dinner rather than supper. அதாவது இரவு போஜனம்.
[3] ஆங்கிலத்தில்: "Lord's Supper". Supper: especially a formal meal usually held at the evening. சூரியன் மறைந்த சாயங்கால நேரம் என்று சொல்லலாம்.
[4] எபிரேய மொழியில்: אֲרוּחַת עֶרֶב. (aruxat erev) - Dinner

இராப்போஜனம் என்று சொல்லிவிட்டு பகலில் கொடுத்தால்.... சரி என்று தோன்றுகிறதா?

ஒருவேளை அதை கர்த்தருடைய பந்தி என்று அழைத்தால், எப்பொழுதுவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணம் வரக்கூடும். கர்த்தருடைய பந்தி, "Holy Communion" என்ற இந்த வார்த்தைகள் வேதத்தில் பயன்படுத்தப்படவில்லை. Lord's Supper, இராப்போஜனம், அப்பம் பிட்குதல் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Does not make any sense to take Lord's Supper at breakfast or lunch.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். கர்த்தர் சொன்னார்: யாத் 12:6-8 "சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று இராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்....அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக"

புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 11:23-26 ல் பவுல் சொல்லும்போது: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இயேசுவும் தாம் காட்டிக்கொடுக்கப்போகிற அன்று சாயங்காலமானபோது (supper), பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார் என்று வாசிக்கிறோம். (மத்தேயு 26:20, மாற்கு 14:17)

யோவான் 13:15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். என்று இயேசு சொல்கிறார். அப்படியானால் வேதத்தின்படிதான் கொடுக்கவேண்டும்.

அப்போஸ்தலானாகிய பவுலும் அப் 20:7-11 ல் வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.

மேலே கூறப்பட்ட வசனத்தில் இரவில் தான் அப்போஸ்தலர்கள் இராப்போஜனத்தை கொடுத்திருக்கிறார்கள். பகலில் அல்ல, ஏனெனில் அதுதான் இயேசு வைத்து சொல்லிவிட்டுபோன மாதிரியாகும்.

மிகவும் முக்கியமாக இயேசு மரித்தநேரத்தில் மத்தேயு 27:45 ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் (12:00pm to 3:00pm) பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. அதாவது அமெரிக்காமுதல் இந்தியா உட்பட்ட எல்லாநாடுகளிலும் ஒரே நேரத்தில் இருள். பேரொளி இல்லை, பூமியெங்கும் இருள். அந்தச்சூழலில் இயேசுவின் சரீரமானது தொங்கிற்று. இராப்போஜனத்தில் பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் சரீரமானது பிட்கப்பட்டு கொடுக்கப்படுகிறது, அங்கே அந்தகாரம் உண்டாயிருந்தது.

பகலில் கொடுக்கவேண்டும் என்று எங்கும் கட்டளையில்லை. இரவிலேதான் கொடுங்கள் என்றும் இயேசு கட்டளையிடவில்லை. இயேசு நமக்கு கொடுத்த மாதியானது இரவுச்சூழல் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது. பகலில் கொடுத்து அதை இராப்போஜனம் என்றழைப்பது தமிழ் மொழியின் அர்த்தத்தின்படி தவறு. பகலில் கொடுத்தால் மரணத்துக்கேதுவான பாவமா என்றால் இல்லை. ஆனால் அது சரியாக இருக்காது.

என்னதான் இருந்தாலும், அந்த குளிர்ச்சியான அமைதி என்னும் இரவுச்சூழலில் (atmosphere) ஜெபிக்கும் போது நம்முடைய சிந்தனை என்னும் அலைவரிசையில் ஒரு வித்தியாசத்தை உணரும் அனுபவமே தனிதான்.

[Part B]
நாம் ஏன் கால்களை கழுவவேண்டும்? (அப்ப ஏன் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூட அடுத்து கேட்கத்தோன்றும்.) நமக்கு தாழ்மையான இருதயம் இருந்தால் மற்றவர்களுடைய கால்களை கழுவவேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இயேசு பேதுருவிடம் சொன்னார்: "நான் உன்னைக் கழுவாவிட்டால் உனக்கு என்னிடத்தில் பங்கில்லை". பங்காகவேண்டும் என்பது முக்கிய காரணம். இயேசு தாழ்மையானவர், அவர் பேதுருவின் கால்களைக் கழுவுவதன் மூலம் அங்கே ஒரு பங்கை அவனுக்கு ஏற்படுத்துகிறார்.

இயேசு பேதுருவிடம் : "முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்." இங்கே முழுகினவன் என்றால் ஞானஸ்நானம் எடுத்தவன் என்று அர்த்தம். பேதுரு இயேசுவை மறுதலித்த பின்பு மனம் கசந்து அழுதான். அதற்கு இயேசுவின் அந்தப் பார்வை மட்டுமே காரணமா? என் ஆண்டவர் என் கால்களைக் கழுவி என்னை தம்முடன் ஒரு பங்காக மாற்றியும் நான் மறுதலித்தேனே.. என்பதைகூட அவன் அங்கே எண்ணியிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் இது இயேசுவின் கட்டளை: "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்"

இப்படி செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவரின் கட்டளையை கைக்கொள்ளாத ஒரு மனிதராவீர்கள்.
 
 

No comments:

Post a Comment